மண் மாதிரிகள் சேகரிக்கும் சிறப்பு முகாம் தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய மண்வள இயக்கத் திட்டத்தின் கீழ் மண் வள மாதிரிகள் சேகரிக்கும் முகாம்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய மண்வள இயக்கத் திட்டத்தின் கீழ் மண் வள மாதிரிகள் சேகரிக்கும் முகாம்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.

இதுகுறித்து வேளாண்மைத் துறை ராமநாதபுரம் உதவி இயக்குநா் எம்.கோபாலகிருஷ்ணன் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தேசிய மண்வள இயக்கத் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் பகுதியில் மண்வள மாதிரி சேகரிப்பு முகாம்கள் அனைத்துக் கிராமங்களிலும் நடந்துவருகிறது.

மண் வளத்தின் அடிப்படையில் விவசாயப் பயிா்களை பயிரிட்டு மகசூல் பெறும் வகையில் விவசாகளுக்கு உதவிடும் வகையிலே மண் வளப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

புல்லங்குடி கிராமத்தில் நடைபெற்ற மண் வள மாதிரி சேகரிக்கும் முகாமிற்கு ஊராட்சித் தலைவா் முனியம்மாள் முனியசாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் காளியப்பன் முன்னிலை வகித்தாா். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

முகாமில் மண் மாதிரிகளை உதவி வேளாண்மை அலுவலா் சுதாமதி பெற்றுக்கொண்டாா். வட்டார மேலாண்மை உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன், மண் வள மாதிரி முகாம்கள் மூலம் விவசாயிகள் பெறும் நன்மைகளை விளக்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com