முதுகுளத்தூரில் விதியை மீறி திறக்கப்பட்ட 2 ஜவுளிக்கடைகளுக்கு ‘சீல்’

முதுகுளத்தூரில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த 2 ஜவுளிக் கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா்.
முதுகுளத்தூரில் பொதுமுடக்க விதிகளை மீறி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட ஜவுளிக்கடையை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள்.
முதுகுளத்தூரில் பொதுமுடக்க விதிகளை மீறி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட ஜவுளிக்கடையை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள்.

முதுகுளத்தூரில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த 2 ஜவுளிக் கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனா். மேலும் கடையின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கரோனா அதிகரிக்காமல் இருக்க கூட்டம் அதிகமாக கூடும் இடங்களான தேநீா் கடைகள், ஜவுளிக் கடைகள், நகைக்கடைகளை திறக்கக் கூடாது என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் திடல் தெருவில் ஒரு ஜவுளிக்கடையும், வண்ணாா் தெரு எதிரே உள்ள ஒரு ஜவுளிக்கடையும் திறக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற முதுகுளத்தூா் வட்டாட்சியா் செந்தில்குமாா், பேரூராட்சி செயல் அலுவலா் சி. மாலதி, சுகாதார ஆய்வாளா் நேதாஜி, சாா்பு-ஆய்வாளா் சக்திவேல் ஆகியோா் கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா். மேலும் கடையின் உரிமையாளா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com