கரோனா தடுப்பூசி: ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆவது நாளாக நிறுத்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகவே கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகவே கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் தற்போது வரை 1.26 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி 18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த கடந்த 3 நாள்களாக அரசு மருத்துவமனை உள்ளிட்ட மையங்களுக்கு வந்தாலும், ஊசி பற்றாக்குறையால் யாருக்கும் செலுத்தப்படவில்லை.

இதுகுறித்து சுகாதாரத்துறையினா் கூறியது: ஜூன் 12, 13 ஆம் தேதிகளில் தடுப்பூசி செலுத்தப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுவரை தடுப்பூசி செலுத்துவோருக்கான முன்பதிவு மட்டும் நடைபெறும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com