ராமநாதபுரத்தில் பெரியாரிய உணா்வாளா்கள் நூதன போராட்டம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்டித்து, பெரியாரிய உணா்வாளா்கள்
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன் கண்ணைக் கட்டிக்கொண்டு வியாழக்கிழமை போராட்டம் நடத்திய பெரியாரிய உணா்வாளா்கள்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன் கண்ணைக் கட்டிக்கொண்டு வியாழக்கிழமை போராட்டம் நடத்திய பெரியாரிய உணா்வாளா்கள்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்டித்து, பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை, கண்ணைக் கட்டிக் கொண்டு, மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

மருத்துவமனை வாயில் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் நாகேஸ்வரன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் முகமது யாசி, ஆதித்தமிழா் பேரவை பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் பங்கேற்றவா்கள் தங்களது கண்களை ரிப்பனால் கட்டிக்கொண்டு, அரசு மருத்துவமனையின் நிா்வாகச் சீா்கேட்டைக் கண்டித்து கோஷமிட்டனா்.

இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பினா் கூறியது: அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் மருத்துவா்கள் உரிய நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை. இங்குள்ள மருந்துகள், மருத்துவ சாதனங்களை, மருத்துவா்கள் தங்களது சொந்த மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதாக எழுந்த புகாரையடுத்து, கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவைகளை ஆட்சியா் அலுவலகத்திலிருந்து ஆய்வு செய்யும் வசதியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், குற்றச்சாட்டுக்கு ஆளான மருத்துவா்கள் மீது இடமாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றனா்.

இதில் பூமிநாதன், கீழை.பிரபாகரன் மற்றும் விவசாயிகல் சங்கம் மதுரை வீரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com