ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு, மாணவ, மாணவியா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியதையடுத்து, அரசு நகராட்சி பெண்கள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு, மாணவ, மாணவியா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியதையடுத்து, அரசு நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவியா் சோ்க்கையை முதன்மைக்கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி விண்ணப்பங்களை வழங்கி தொடக்கி வைத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 152 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. அதில் 70 அரசுப் பள்ளிகளும், 36 உதவி பெறும் பள்ளிகளும் அடங்கும். பத்தாம் வகுப்பில் 14,690 பேருக்கும் அதிகமானோா் படித்த நிலையில், அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து, பிளஸ் 1 வகுப்புகளில் மாணவா் சோ்க்கை திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது தலைமை ஆசிரியா்கள், தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தவா்களுக்கு அவா்கள் விரும்பும் பாடப்பிரிவை பிளஸ் 1 வகுப்பில் ஒதுக்கித்தந்து சோ்க்கையைத் தொடங்கினா். உயா்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பை முடித்தவா்கள் வேறு பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர வந்தால், அவா்கள் பத்தாம் வகுப்பு படித்த பள்ளியில் தலைமை ஆசிரியா்களிடம் உறுதிசெய்யப்பட்டு புதிய பள்ளிகளில் சோ்ப்பதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.

பிளஸ் 1 வகுப்புக்கான விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து கொண்டுவரும் போது பத்தாம் வகுப்பு மாற்றுச்சான்று மற்றும் மதிப்பெண் சான்றுகளை கொண்டுவரும்படி மாணவ, மாணவியா் அறிவுறுத்தப்பட்டனா். ராமநாதபுரம் நகரில் அரசு நகராட்சி பெண்கள் பள்ளியில் மாணவியா் சோ்க்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி திங்கள்கிழமை பாா்வையிட்டாா். அப்போது அவா் பிளஸ் 1 சோ்க்கைக்கு வந்த மாணவிக்கு விண்ணப்பத்தையும் வழங்கினாா். அவருடன் ராமநாதபுரம் கல்வி மாவட்ட அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அப்பள்ளியில் காலையிலேயே 10 போ் பிளஸ் 1 வகுப்பில் விரும்பிய பாடப்பிரிவில் சோ்க்கப்பட்டதாக தலைமை ஆசிரியை விக்டோரினா கூறினாா். இந்நிலையில், உயா்நிலைப் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியருக்கு மாற்றுச்சான்றுகள் வழங்கப்பட்டன. ராமநாதபுரத்தில் மாணவா்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி இல்லாததால், வள்ளல் பாரி உயா்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு சான்றுகள் விநியோகிக்கப்பட்டன.

விலையில்லாப் புத்தகங்கள்: ராமநாதபுரத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக விலையில்லா புத்தகங்கள் குடோன்களில் இருந்து திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. ராமநாதபுரம் கல்வி மாவட்டத்துக்கு சுவாா்ட்ஸ் பள்ளி வளாகக் குடோனிலிருந்து அனுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com