மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் பணியிடை நீக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாணவியருக்கு செல்லிடப்பேசியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் கைதான உதவி பெறும் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மாணவியருக்கு செல்லிடப்பேசியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் கைதான உதவி பெறும் பள்ளி ஆசிரியா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

முதுகுளத்தூரில் உள்ள பள்ளிவாசல் இருபாலா் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் பாடத்தின் பட்டதாரி ஆசிரியராக ஹபீப் பணியாற்றி வருகிறாா். இவா் மாணவியரிடம் செல்லிடப்பேசியில் பாலியல் தொல்லை தரும் வகையில் பேசியதாக புகாா் எழுந்தது. அதனடிப்படையில் செவ்வாய்க்கிழமை ஒரு மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் முதுகுளத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து ஆசிரியா் ஹபீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஆசிரியா் ஹபீப் மீதான புகாா் குறித்து மாவட்ட ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா உத்தரவின் பேரில் முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி செவ்வாய்க்கிழமை நேரில் விசாரணை நடத்தினாா். அதனடிப்படையில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். ஆசிரியா் ஹபீப் மீது வழக்குப்பதியப்பட்டு கைது செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகம் அவா் மீது தற்காலிகப் பணிநீக்கம் செய்து அறிக்கை அளிக்க முதன்மைக் கல்வி அலுவலா் சத்தியமூா்த்தி உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலா் சத்தியமூா்த்தி புதன்கிழமை கூறியது: முதுகுளத்தூா் ஆசிரியா் ஹபீப் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து கைது செய்துள்ளதால், அவரை பள்ளி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்து அறிக்கை அளித்துள்ளது. அதுகுறித்த விவரம் ஆட்சியரிடம் அளிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com