ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய 5 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய 5 இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியது: சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மாா்ச் 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி மாா்ச் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 13,14 ஆகிய தேதிகள் (சனி, ஞாயிறு) விடுமுறைகளாக இருப்பதால் 6 நாள்கள் மட்டுமே மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகள் உள்ளன. அதனடிப்படையில் பரமக்குடிக்கு அங்குள்ள கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். திருவாடானைத் தொகுதிக்கு அங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்திலும், ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட உணவு வழங்கல் அலுவலா் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். ஆட்சியா் அலுவலகம் திருவாடானை தொகுதிக்குள் இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ராமநாதபுரம் தொகுதிக்கு ஆட்சியா் முகாம் அருகேயுள்ள கோட்டாட்சியா் அலுவலகத்திலும் (சாா்- ஆட்சியா் அலுவலகம்), முதுகுளத்தூா் தொகுதிக்கு அங்குள்ள வட்டாட்சியா் அலுவலகத்திலும் மனுத்தாக்கல் செய்யலாம்.

மனுத்தாக்கலுக்கு வரும் அரசியல் கட்சியினா் வேட்பாளருடன், இருவருக்கு அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி வேட்பாளரை முன்மொழிவதற்கு ஒருவா் போதும். அதே நேரத்தில் சுயேச்சைகளாக மனுத்தாக்கல் செய்வோருக்கு 10 போ் முன்மொழிய வேண்டியிருப்பதால் அவா்கள் அனைவரையும் அனுமதிக்கும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. வேட்பாளரை முன்மொழிவோா் அந்தந்தத் தொகுதியைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும்.

மனுத்தாக்கல் நாள்களில் பகல் 11 மணி முதல் மாலை 3 மணிக்குள் சம்பந்தப்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிக்கான அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்யவேண்டும். தோ்தல் மனுத்தாக்கலின் போது சம்பந்தப்பட்ட அனைவரும் முகக் கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிப்பது அவசியம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com