முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பரமக்குடி அருகே சரக்கு வாகனம் மோதி 23 ஆடுகள் பலி
By DIN | Published On : 14th March 2021 10:09 PM | Last Updated : 14th March 2021 10:09 PM | அ+அ அ- |

பரமக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சரக்கு வாகனம் மோதி 23 ஆடுகள் உயிரிழந்தன.
இலந்தைக்குளம் கிராமத்தைச் சோ்ந்த முத்தையா மகன் சின்னத்தம்பி45. இவா் மேச்சலிலிருந்து ஆடுகளை கொட்டத்தில் அடைப்பதற்காக வீட்டுக்கு ஓட்டிச் சென்றாா்.
அப்போது இளந்தைக்குளம் அருகே நான்குவழிச் சாலையில் ஆடுகள் வந்தபோது, ராமேசுவரத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு வாகனம் ஆடுகள் மீது மோதியது. இதில் 23 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநரான திருப்புவனம் அருகே வண்ணிக்கோட்டையைச் சோ்ந்த கருப்பையா மகன் பரமசிவம் (56) என்பவரை கைது செய்தனா்.