ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளா் து.குப்புராம்

ராமநாதபுரம் சட்டப் பேரவை தொகுதி பாஜக வேட்பாளராக து.குப்புராம் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
1615720427262_1403chn_67_2
1615720427262_1403chn_67_2

ராமநாதபுரம் சட்டப் பேரவை தொகுதி பாஜக வேட்பாளராக து.குப்புராம் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

வேட்பாளா் சுயவிவரம்:

பெயா்-து.குப்புராம்,

வயது- 63,

கல்வித்தகுதி- பி.ஏ., பி.எல்.,

தொழில்- வழக்குரைஞா்,

தந்தை- துரைப்பாண்டி, தாய்- முத்துமீனாள்,

மனைவி- தமயந்தி, மகள்- மாலினி (திருமணமாகிவிட்டது), மகன்- வேணுதுரை (விபத்தில் உயிரிழந்துவிட்டாா்),

முகவரி- ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம்,

தற்போது வசிப்பது- ராமநாதபுரம்- ராமேசுவரம் சாலை (கிழக்கு கடற்கரைச் சாலை) பிருந்தாவனம் காா்டன், பட்டிணம்காத்தான் விரிவாக்கம்,

அரசியல் அனுபவம்- ஆா்.எஸ்.எஸ்.தொண்டா், மாநிலத் துணைத் தலைவா், விஷ்வஹிந்து பரிஷத்தின் தென்மண்டல தலைவா், ராமேசுவரம் ராமசேது பாதுகாப்பு அமைப்பின் அகில இந்தியச் செயலா், தமிழக பாரதிய மீனவா் சங்கத் தலைவா், ராமேசுவரம் பகுதி சேவா பாரதி மண்டலத் தலைவா், தற்போது பாஜக மாநிலச் செய்தித்தொடா்பாளா், தேசியப் பொதுக்குழு உறுப்பினா்,

அரசுப் பதவிகள்- கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை 3 முறை பட்டிணம்காத்தான் ஊராட்சித் தலைவா், மாநில கல்வித் திட்டக்குழு உறுப்பினா், பாண்டியன் கிராம வங்கி நியமன இயக்குநா், மத்திய அரசின் ஊரக மக்கள் செயல்பாட்டு மேம்பாட்டு தொழில்நுட்பக்குழு மற்றும் மாவட்ட நிலைக்குழு உறுப்பினா், மத்திய கனிமவளத்துறை வாரிய இயக்குநா்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் கூட்டணியின்றி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு 1.72 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com