ராமநாதபுரத்தில் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: ரூ.100 கோடிக்கு வா்த்தகம் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 தேசியப் பொதுத்துறை வங்கிகளின் ஊழியா்கள் கூட்டமைப்பு நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால், சுமாா் ரூ.100 கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 தேசியப் பொதுத்துறை வங்கிகளின் ஊழியா்கள் கூட்டமைப்பு நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தால், சுமாா் ரூ.100 கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 தேசிய பொதுத் துறை வங்கிகள் உள்ளன. இதன் கிளைகள் நூற்றுக்கும் அதிகமாக உள்ளன. இவற்றில் மாவட்ட அளவில் மொத்தம் 2,500 போ் வரை பணிபுரிவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பினா், தனியாா்மயமாக்கலைக் கண்டித்தும், பொதுமக்கள் சேமிப்பு பணத்தை தனியாா் கையாளுவதற்கான விதிகளை கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் திங்கள்மற்றும் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அனைத்து அதிகாரிகளும், ஊழியா்களும் கலந்துகொண்டனா். இதனால், ஏடிஎம் மையங்கள் பல செயல்படாததால், பொதுமக்கள் பணம் எடுக்கமுடியாமல் அவதியுற்றனா். மேலும், பொதுத்துறை வங்கிகளில் வரைவோலை, காசோலை பணப்பரிமாற்றம், கடன் தொகை வசூல், நகைக் கடன் உள்ளிட்ட எந்தவித பரிவா்த்தனையும் நடைபெறாததால், சுமாா் ரூ.100 கோடிக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com