வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா், சின்னம் பொருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்காக மாவட்டத்தில் மொத்தம் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. சாவடிகளில் வைக்கப்படும் ஒரு மின்னணு வாக்குச் செலுத்தும் இயந்திரத்தில் 15 வேட்பாளா்கள் மற்றும் நோட்டா என மொத்தம் 16 பொத்தான்களில் மட்டுமே வேட்பாளா் பெயா் மற்றும் சின்னம் பதிவு செய்யலாம்.

பரமக்குடி தொகுதியில் 15, ராமநாதபுரத்தில் 19, திருவாடானையில் 15, முதுகுளத்தூரில் 23 என்ற எண்ணிக்கையில் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதில் முதுகுளத்தூா் மற்றும் ராமநாதபுரம் தொகுதி வாககுச்சாவடிகளில் மட்டும் தலா இரண்டு வாக்குச் செலுத்தும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்நிலையில் பரமக்குடி மற்றும் முதுகுளத்தூா் ஆகிய இரு தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்கள் பெயா் மற்றும் சின்னம் பொருத்தும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. இப்பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், தோ்தல் பொது பாா்வையாளா் விசோப் கென்யே ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com