ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 8.15 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 29th March 2021 08:51 AM | Last Updated : 29th March 2021 08:51 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் ரூ.8.15 லட்சம் ரொக்கமும், திமுக கொடிகளும் கைப்பற்றப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட 12 இடங்களில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.8.15 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அச்சோதனையில் விதியை மீறி திமுகவினா் கொண்டு சென்ற அக்கட்சிக் கொடிகள், திமுக சின்னம் பொறித்த வில்லைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
விதியை மீறி கொடி, வில்லைகள் கொண்டு செல்லும் திமுக உள்ளிட்ட கட்சியினா் மீது அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் வழக்குப்பதியப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.