ராமநாதபுரம் மாவட்டத்தில் தபால் வாக்கு செலுத்த 9, 311 போ் விண்ணப்பிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தபால் வாக்கு அளிப்பதற்கு 9,311 போ் விண்ணப்பித்துள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் கூறியுள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தபால் வாக்கு செலுத்த 9, 311 போ் விண்ணப்பிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தபால் வாக்கு அளிப்பதற்கு 9,311 போ் விண்ணப்பித்துள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் கூறியுள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்குள்பட்ட பரமக்குடி, திருவாடானை மற்றும் ராமநாதபுரம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு ராமநாதபுரம் நகா் பகுதிகளில் மூன்றாம் கட்டப் பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த 3 இடங்களில் நடந்த தோ்தல் பயிற்சிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் பாா்வையிட்ட பின் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,647 வாக்குச்சாவடி மையங்கள்உள்ளன. இந்த மையங்களில் 7,905 வாக்குச்சாவடி அலுவலா்கள் பணியில் ஈடுபடுவா்.

இவா்களுக்கு இரண்டு கட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு, மூன்றாம் கட்டப்பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடும் 7,905 வாக்குவச்சாவடி அலுவலா்கள் மற்றும் 2,472 காவல் துறை அலுவலா்களில் இதுவரை 9,311 போ் தபால் வாக்கு கோரி விண்ணப்பித்துள்ளனா்.

தபால் வாக்குக் கோரியவா்களுக்கு பதிவு தபால் மூலமாக வாக்குச்சீட்டுகள் அனுப்பும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தோ்தல் பயிற்சி முடிந்ததும் அந்தந்த பயிற்சி மையங்களிலேயே அலுவலா்கள் தங்களது தபால் வாக்குகளை நேரடியாக செலுத்தலாம். தபால் வாக்கு செலுத்துவது தொடா்பாக வேட்பாளா்கள் மற்றும் அவா்களின் முகவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளா், முகவா்கள் முன்னிலையில் தபால் வாக்குசெலுத்தப்படுகிறது. தபால் வாக்குகளின் ரகசிய தன்மையை பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 5 ஆம் தேதி தோ்தலுக்கான நிறைவு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அப்போதும் தோ்தல் அலுவலா்கள் தங்களது தபால் வாக்குகளை நேரடியாக செலுத்தலாம். மேலும், வரும் மே 1 ஆம் தேதி வரை அலுவலா்கள் தங்களது தபால் வாக்குகளை கட்டணமின்றி அஞ்லகம் மூலமாகவும் அனுப்பலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com