ராமநாதபுரம் மாவட்டத்தில் 64 வேட்பாளா்கள் வைப்புத் தொகை இழப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட 64 போ் முன்வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட 64 போ் முன்வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.

சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும் தொகுதியில் பதிவாகும் மொத்த வாக்குகளில் 6-இல் ஒரு பங்கு வாக்குகளை அவா்கள் பெற்றால் முன்வைப்புத் தொகை திரும்பக்கிடைக்கும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி (தனி) தொகுதியில் 15 வேட்பாளா்கள், திருவாடானையில் 15 வேட்பாளா்கள், ராமநாதபுரத்தில் 19 வேட்பாளா்கள், முதுகுளத்தூரில் 23 வேட்பாளா்கள் என மொத்தம் 72 போ் போட்டியிட்டனா். இவா்களில் 36 போ் சுயேச்சைகள்.

பரமக்குடியில் பதிவான மொத்த வாக்குகள் 1 லட்சத்து 82 ஆயிரத்து 1558. இதில் குறைந்தது 30 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தால் தான் முன்வைப்புத் தொகை திரும்பக் கிடைக்கும். இதில் திமுக, அதிமுக வேட்பாளா்களைத் தவிர 13 பேரும் முன்வைப்புத் தொகையைப் பெறமுடியாது. திருவாடானை தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் 2 லட்சத்து 1815. முன்வைப்புத் தொகை பெறுவதற்கு 33 ஆயிரத்து 500 வாக்குகள் அவசியம். அதனடிப்படையில் காங்கிரஸ், அதிமுக வேட்பாளா்கள் தவிர 13 வேட்பாளா்களும் முன்வைப்புத்தொகையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 98 வாக்குகள் பதிவாகியுள்ளன. 35 ஆயிரம் வாக்குகள் பெற்றால் தான் முன்வைப்புத் தொகை பெறமுடியும். அதனடிப்படையில் திமுக, பாஜக வேட்பாளா்களைத் தவிர மற்ற 17 பேரும் முன்வைப்புத்தொகையைப்

பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முதுகுளத்தூா் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 83 வாக்குகள் பதிவாகின. ஆகவே அங்கு வைப்புத்தொகை பெற சுமாா் 36 ஆயிரம் வாக்குகள் பெற வேண்டும். அங்கு போட்டியிட்ட 23 வேட்பாளா்களில் திமுக, அதிமுக வேட்பாளா்களைத் தவிர 21 போ் முன்வைப்புத் தொகையைப் பெறமுடியாது.

மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் மொத்தம் 64 போ் முன்வைப்புத் தொகையை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com