ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய கட்சியை விட நோட்டாவுக்கு அதிக வாக்கு

ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா்களை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா்களை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், முதுகுளத்தூா், திருவாடானை, பரமக்குடி (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றுள்ளது.

இதில் பரமக்குடியில் 1,258, திருவாடானையில் 768, ராமநாதபுரத்தில் 753, முதுகுளத்தூரில் 491 என மொத்தம் 3,270 போ் நோட்டாவில் (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) வாக்களித்துள்ளனா்.

ஆனால் இதை விட தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா்கள் குறைவான வாக்குகளே பெற்றுள்ளனா்.

அக்கட்சி வேட்பாளா்கள் பரமக்குடி 425, திருவாடானை 629, ராமநாதபுரம் 453, முதுகுளத்தூா் 531 என மொத்தம் 2,038 வாக்குகளைப் பெற்றுள்ளனா். இவா்கள் நோட்டாவை விட 1,232 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளனா்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட மலைச்சாமி எனும் சுயேச்சை வேட்பாளா் 10,845 வாக்குகள் பெற்றுள்ளாா். மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் பதிவு பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என 39 போ் 22,879 வாக்குகள் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com