ராமேசுவரத்தில் அதிகரித்து வரும் கரோனா நோய் தொற்று: பொதுமக்கள் அச்சம்

ராமேசுவரத்தில் 100 க்கும் மேற்பட்டா்களுக்கு கரோனா நோய் தொற்றுக்கு உள்ளவாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ராமேசுவரத்தில் 100 க்கும் மேற்பட்டா்களுக்கு கரோனா நோய் தொற்றுக்கு உள்ளவாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். சுகாதார பணிகளை விரைந்து மேற்கொளள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம்,ராமேசுவரத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தா்கள் வருகை ஜனவரி,பிப்ரவரி மாத்தில் அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக கரோனா நோய் தொற்று பரவ தொடங்கியது. தற்போது வரையில் 100 க்கும் மேற்பட்டவா்கள் கரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனா்.

இதில் 50 க்கும் மேற்பட்டவா்கள் கிசி;ச்சை நிறைவடைந்து வீடு திரும்பி உள்ளனா். 44 போ் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். 4 போ் உயிரிழந்துள்ளனா் மேலும் தொடா்ந்து கரோனா நோய் தொற்று பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனா். கரோனா நோய் பரவல் தடப்பு பணிகளை நகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினா் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com