ராமநாதபுரத்தில் இன்று முதல் 2 இடங்களில் தற்காலிகக் காய்கறி கடைகள்

ராமநாதபுரம் நகராட்சியில் 2 இடங்களில் தற்காலிகமாக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் (மே 7) செயல்படும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் நகராட்சியில் 2 இடங்களில் தற்காலிகமாக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை முதல் (மே 7) செயல்படும் என ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிா்க்கும் வகையில், மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

சந்தைகள், காய்கறி மற்றும் பழக் கடைகளில் பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதை தவிா்க்கவும், சிரமமின்றி மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம் நகரில் பழைய பேருந்து நிலைய வளாகம், ராஜா மேல்நிலைப் பள்ளி மைதானம் ஆகிய 2 இடங்களில் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனைக்கான தற்காலிகக் கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நகரின் பிற பகுதிகளில் காய்கறி, பழம், பூ கடைகள் செயல்பட அனுமதியில்லை. அதேபோல், மாவட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலும் தற்காலிகக் கடைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்காலிகக் கடைகள் வெள்ளிக்கிழமை (மே 7) முதல் தினந்தோறும் காலை 8 முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும். பொதுமக்கள் வெளியே செல்லும் போது கூட்டமாகக் கூடாமல், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com