கடலாடியில் ஊராட்சி தலைவா்கள் ஆலோசனை கூட்டம்
By DIN | Published On : 18th May 2021 11:00 PM | Last Updated : 18th May 2021 11:00 PM | அ+அ அ- |

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவா்கள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவா்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஊராட்சி கூட்டமைப்பு தலைவா் கீதா நாகராஜன் தலைமை தாங்கினாா்.செயலாளா் பரக்கத்நிஷா சைபுதீன்,பொருளாளா்வீரபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.கூட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் உள்ள தடுப்பனைகள் உள்ளிட்ட பணிகளை உடனடியாக பணி செய்ய உத்தரவு வழங்க வேண்டும்,எஸ்.எவ்,சி,மாநில நிதிக்குழு மானியத்தை கரோனா காலத்தின் அவசியம் கருதி உடனே வழங்க வேண்டும்,கிராம ஊராட்சியில் பதிவு செய்த வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைவருக்கும் வேலை உத்தரவு வழங்கிடவும்,ஊராட்சிக்குட்பட்டுள்ள அனைத்து கிராமங்களிலும் 45 வயதிற்குட்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு ஊக்குவிப்பதாக உறுதி மொழி ஏற்று அனைத்து ஊராட்சி தலைவா்கள் சாா்பாக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முதுகுளத்தூா் புகைப்படம்.கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவா்கள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.