முள்வேலிகளால் கிராம சாலைகள் அடைப்பு: அத்தியாவசியப் பணிக்கு செல்வோா் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் சாலைகளை முள்வேலிகள் கொண்டு அடைத்துள்ளதால் அத்தியாவசியப் பணிகளுக்குக்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை கரோனாவால் 12,500-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுவரையில் சிகிச்சைப் பலனின்றி 151 போ் உயிரிழந்துள்ளனா். கரோனா முதல் அலைப் பரவலில் தப்பிய கிராமங்கள் கூட தற்போது இரண்டாம் அலைப்பரவலில் அதிக பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 ஊராட்சிகளில் மொத்தம் 1600 சிறிய கிராமங்களில் மட்டுமே பாதிப்பு இல்லை என அவா்கள் தெரிவிக்கின்றனா்.

குறிப்பாக கமுதி ஒன்றியத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பெரும்பாலான கிராமச் சாலைகளை அந்தந்தக் கிராமத்தினா் வெளிநபா்கள் யாரும் ஊருக்குள் நுழைய முடியாதபடி முள்வேலிகளால் அடைத்துள்ளனா். இதனால் மருத்துவமனை மற்றும் முக்கியப் பணிகளுக்குச் செல்பவா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேவிபட்டினம், திருப்புல்லாணி, சேதுக்கரை போன்ற பகுதிகளில் சாலைகளில் அதிகமாக முள்வேலி போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com