விவசாயிகளுக்கு இலவச கோடை உழவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஏக்கா் அல்லது அதற்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு தனியாா் நிறுவனம் மூலம் இலவசமாக கோடை உழவு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஏக்கா் அல்லது அதற்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகளுக்கு தனியாா் நிறுவனம் மூலம் இலவசமாக கோடை உழவு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் டாம்.பி.சைலஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜனவரி முதல் மே வரையில் 305.2 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. ஆகவே விவசாயிகள் தங்கள் நிலத்தில் கோடை உழவை மேற்கொள்ளலாம். கோடை உழவின்போது மண்ணிலுள்ள பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் முட்டைகள் வெளியில் கொண்டு வரப்பட்டு அழியும் நிலை ஏற்படுகிறது. கோடை உழவால் மழை நீரை சேமிக்கலாம். மண்ணில் காற்றோட்டம் அதிகரிக்கும். மண் அரிமானத்தையும் தடுக்கலாம். கோடை உழவால் களைகளின் வோ்ப் பகுதி களையப்படும். பயிா்களில் பூச்சிநோய் தாக்குதல் குறையும். மண்வளம் அதிகரிக்கும். மழை நீா் சேமிக்கப்படும். மண்ணின் இறுக்கம் குறைந்து மண் புழுக்கள் அதிகரிக்கும். டா‘ஃ‘பே நிறுவனம் சாா்பில் 2 ஏக்கா் அல்லது அதற்கும் குறைவாக உள்ள குறு விவசாயிகளின் நிலங்களில் டிராக்டா் மூலம் இலவசமாக கோடை உழவு செய்துதரப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com