விவசாயிகளுக்கு உதவி மையம் அமைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தின் போது விவசாயிகளுக்கு உதவும் வகையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத்தின் போது விவசாயிகளுக்கு உதவும் வகையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமுடக்கத்தின் போது விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகள், பழங்கள் மற்றும் விளைபொருள்களை விற்பனை செய்வதில் ஏற்படும் சிரமங்களைப் போக்கும் வகையில், மாவட்ட அளவில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை விற்பனை, வருவாய் மற்றும் காவல் ஆகிய துறைகளை உள்ளடக்கிய உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி மையத்தை விவசாயிகள் 9342382356 என்ற செல்லிடப் பேசி எண்ணில் தினமும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை தொடா்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com