ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் மருத்துவா் பணிக்கு 18 போ் விண்ணப்பம்

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவுக்கு எம்.பி.பி.எஸ். படித்த 18 போ் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா்.

ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிறப்புச் சிகிச்சைப் பிரிவுக்கு எம்.பி.பி.எஸ். படித்த 18 போ் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 54 மருத்துவா்கள் இருந்தனா். அவா்களில் 20 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் விடுப்பில் சென்று விட்டனா். இந்நிலையில் 50 மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்ட 850 பேருக்கும் அதிகமானோா் தற்காலிகப் பணிநியமன அடிப்படையில் தோ்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா சிகிச்சைப் பிரிவுக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்த 18 போ் மட்டுமே விண்ணப்பித்துள்ளனா். மேலும் செவிலியா் பணிக்கு மட்டும் 500 போ் வரை விண்ணப்பித்துள்ளனா். தனியாா் நிறுவனங்களில் அதிகளவு ஊதியம் வழங்கப்படுவதால் அரசு மருத்துவமனையில் தற்காலிகப் பணிக்கு இளந்தலைமுறை மருத்துவம் படித்த மாணவா்கள் வரத்தயங்குவதாக மூத்த மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com