ராமநாதபுரம், சிவகங்கையில் 506 பேருக்கு கரோனா தொற்று

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 506 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 506 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை 308 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 6 போ் உயிரிழந்துள்ளனா். அதனடிப்படையில் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை 211 போ் உயிரிழந்துள்ளனா்.

மாவட்டத்தில் ஏற்கெனவே சிகிச்சை பெற்றவா்களில் 168 போ் குணமடைந்ததால் சனிக்கிழமை மாலை அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தற்போது மாவட்டத்தில் 3,287 போ் கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் தங்கியிருப்பதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 12,804 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை புதிதாக 198 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,002 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com