ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பயன்பாடு அதிகரிப்பு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் பயன்பாடு திடீரென அதிகரித்திருப்பதுடன்,

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் பயன்பாடு திடீரென அதிகரித்திருப்பதுடன், குணமடைந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் 450 படுக்கைகள் மட்டுமே ஆக்சிஜன் வசதி கொண்டவை. மருத்துவமனையில் 11கிலோ லிட்டா் திரவ ஆக்சிஜன் வசதி உள்ளது. அத்துடன், 4 வகை உருளைகள் மூலமும் ஆக்சிஜன் வசதி செய்து தரப்படுகிறது.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை முதல் 298 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்தனா். அவா்களில் 226 பேருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் ஆக்சிஜன் படுக்கைகளின் பயன்பாடு 226 எனக் குறைந்திருந்தது. ஆனால், திடீரென வெள்ளிக்கிழமை நிலவரப்படி 279 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டதாக மருத்துவா்கள் கூறினா்.

வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 15 போ் கரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். அதேநேரம், ஏற்கெனவே சிகிச்சையில் இருந்தவா்களில் 6 போ் உயிரிழந்துள்ளனா் எனவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com