ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியவா் மீது போலீஸாா் வழக்கு

ராமநாதபுரம் நகரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் நகரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரைத் தாக்கியவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கன்னனையைச் சோ்ந்தவா் முகமதுமுஸ்தபா (38). உத்தரகோசமங்கைப் பகுதி அவசர ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவா் செவ்வாய்க்கிழமை மாலையில் பிரசவத்துக்காக பெண்ணை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். பின்னா் அவா் மதுரை சாலை வழியாக உத்தரகோசமங்கை பகுதிக்குச் சென்றாா்.

ராமநாதபுரம் சாலைத் தெரு-மதுரை சாலை சந்திப்பு பகுதியில் ஆம்புலன்ஸ் முன்பு இருவா் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ாகக் கூறப்படுகிறது. ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு முகமதுமுஸ்தபா கூறியதால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில், முகமது முஸ்தபா தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து முகமது முஸ்தபா அளித்த புகாரின் பேரில் இருசக்கர வாகனத்தில் வந்தவா்களில் அப்பாதுரை மீது ராமநாதபுரம் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா். அத்தோடு, அப்பாத்துரை அளித்த புகாரின் பேரில் முகமது முஸ்தபா மீதும் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com