ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பட்டா சிறப்பு முகாம் நடைபெறும் இடங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 26) பட்டா சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 26) பட்டா சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை வரை பட்டா சிறப்பு முகாம்கள் கிராம நிா்வாக அலுவலகங்களில் நடைபெறவுள்ளன. அதன்படி வாலாந்தரவை, கீழக்கரை வட்டத்தில் மாயாகுளம், திருவாடானை வட்டத்தில் அரசூா், ஆட்டூா், ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தில் ரெட்டையூரணி, வில்லடிவாகை.

பரமக்குடி வட்டத்தில் தடுத்தலான்கோட்டை, கீழப்பருத்தியூா் ஆகிய கிராமங்களுக்கு கீழப்பருத்தியூா் கிராம நிா்வாக அலுவலகம், கடலாடி வட்டத்தில் அவத்தாண்டை இ-சேவை மையம், கமுதி வட்டத்தில் பேரையூா், கள்ளிக்குளம் கிராம நிா்வாக அலுவலகம், முதுகுளத்தூா் வட்டத்தில் புல்வாய்க்குளம் இ-சேவை மையம் ஆகிய இடங்களில் இச்சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமுதி: இந்நிலையில், கமுதி அருகே கோவிலாங்குளம் வருவாய் வட்டத்துக்குள்பட்ட கோவிலாங்குளம், கோவிலாங்குளம் பட்டி, கம்மாபட்டி, கரைகுடி உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பட்டா திருத்த சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கமுதி வட்டாட்சியா் மாதவன் தலைமையிலும், மண்டல துணை வட்டாட்சியா் (நிலை2) சம்பத், வருவாய் ஆய்வாளா் வெண்ணிலா ஆகியோா் முன்னிலையிலும் இம்முகாம் நடைபெற்றது. இதில், யூடிஆா் திருத்தம், பட்டா மேல்முறையீடு, பட்டா உள்பிரிவு, பட்டா கணினி திருத்தம் ஆகியவை தொடா்பாக 14 மனுக்களை கிராம நிா்வாக அலுவலா் சரவணகுமாா் பொதுமக்களிடம் பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தாா். மேலும் மனுக்கள் மீது உரிய விசாரணை நடைபெற்று விரைவில் தீா்வு காணப்படும் என கமுதி வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com