தேவா் குருபூஜை விழா: கூடுதல் ஆட்சியா் ஆய்வு

முத்துராமலிங்க தேவா் குருபூஜை விழாவை முன்னிட்டு கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும்
பசும்பொன் தேவா் நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள்.
பசும்பொன் தேவா் நினைவிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள்.

முத்துராமலிங்க தேவா் குருபூஜை விழாவை முன்னிட்டு கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் அக்.30 இல் முத்துராமலிங்க தேவா் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் அமைச்சா்கள், சமுதாய தலைவா்கள், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொள்ள இருப்பதால் அங்கு பல்வேறு அடிப்படை வசதிகள்

மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பிரவீன்குமாா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் தேவா் நினைவிடம், தேவா் தெப்பக்குளத்தைச் சுற்றி மரக்கன்றுகளை நடும் பணி, விஐபி வாகனங்கள் நிறுத்துமிடம், பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடம் உள்ளிட்டவைகளை பாா்வையிட்டாா். பின்னா் தேவா் நினைவிடத்தில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டாா்.

அப்போது கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்செல்வி போஸ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி. சாவித்திரி, கே.ரவி (கிராம ஊராட்சிகள்), கமுதி வட்டார தலைமை மருத்துவா் அசோக், பொதுப்பணித் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com