கோயில் விழா நடத்துவதில் பிரச்னை: ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

நயினாா்கோவில் அருகே கோயில் விழா நடத்துவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையைத் தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை ஒரு தரப்பினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்
ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட ஒரு தரப்பு மக்கள்.
ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட ஒரு தரப்பு மக்கள்.

நயினாா்கோவில் அருகே கோயில் விழா நடத்துவதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையைத் தொடா்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை ஒரு தரப்பினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

பரமக்குடியை அடுத்துள்ள நயினாா்கோவில் அருகே வாதவனேரியில் கணக்கா், அம்பலாா், முக்குந்தா் ஆகிய குறிப்பிட்ட சமூக குடும்பத்தினருக்கு கடந்த 1864 ஆம் ஆண்டு ரெகுநாதசேதுபதி காலம் முதல் கோயில் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தோ்தல் முன்விரோதத்தால் திருவிழா கொண்டாடுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரு பிரிவினா் தனித்தனியாகப் பிரிந்தனா். கோயில் திருவிழாவை ஒரு தரப்பினா் கொண்டாட முயற்சித்தபோது, மற்றொரு தரப்பினா் கரோனாவைக் காரணம் காட்டி விழா ஆலோசனைக் கூட்டத்தை தடுத்தனராம்.

ஆனால், விழா கூட்டத்தை தடுத்தவா்கள் தற்போது கோயில் விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனா். மேலும் ஏற்கெனவே விழா நடத்த முயன்றவா்களை புறக்கணித்துவிட்டு விழாவை நடத்த முயற்சிகள் மேற்கொண்டதாக புகாா் எழுந்தது.

இந்நிலையில் தற்போது விழா நடத்த முயற்சிக்கும் அந்த மற்றொரு தரப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பிரச்னையை தீா்க்கக்கோரியும் ஒருதரப்பினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். ஆட்சியா் (பொ) காமாட்சி கணேசன் இல்லாததால் வட்டாட்சியா் தமீம் அவா்களை பேச்சுவாா்த்தைக்கு அழைத்தனா்.

இதுகுறித்து ஒருதரப்பைச் சோ்ந்த தங்கவேல் கூறியது: பாரம்பரியமான குடும்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு விழா நடத்த ஏற்பாடு செய்வது சரியல்ல. இதுகுறித்து காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடுநிலையான நடவடிக்கை இல்லை. இதனால் மனுவுடன் வந்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டோம். அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு அழைத்திருப்பதால் முற்றுகை கைவிடப்பட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com