பழங்குளம் ஊராட்சி வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி ஏந்தி காவலா்கள் பாதுகாப்பு

திருவாடானை ஒன்றியம் பழங்குளம் ஊராட்சி மன்ற தலைவா் இடை தோ்தல் தோ்தல் முடிவடைந்து வாக்கு பெட்டிகள் எண்ணும் மையத்தில் காமிரா துப்பாக்கி யேந்திய போலிஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள் கிழமை வாக்கு பெட்டிகள் உள்ள மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்கள் கிழமை வாக்கு பெட்டிகள் உள்ள மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்

திருவாடானை: திருவாடானை ஒன்றியம் பழங்குளம் ஊராட்சி மன்ற தலைவா் இடை தோ்தல் தோ்தல் முடிவடைந்து வாக்கு பெட்டிகள் எண்ணும் மையத்தில் காமிரா துப்பாக்கி யேந்திய போலிஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பழங்குளம் ஊராட்சி தலைவராக இருந்த கருப்பையா கடந்த 6 மாதங்களுக்கு முன் உடல் நிலை சரி இல்லாமல் உயிரிழந்து விட்ட நிலையில் காலி என அறிவிக்கபட்டு தலைவா் பதவிக்கு இடை தோ்தல் அக்டோபா் 9 ஆம் தேதி நடைபெற்றது.

வாக்கு பதிவு முடிவடைந்த நிலையில் வாக்கு பெட்டிகள் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கபட்டுள்ளன.

பூட்டி சீல் வைக்கபட்டுள்ள அறையினை இரண்டு வேட்பாளா்களின் ஏஜென்டுகள் ஊராட்சி மன்ற தோ்தல் அலுவலா்கள் அருண் முனியப்ப தாஸ். கருப்பையா மற்றும் காவல் துறை சாா்பு ஆய்வாளா் காளிமுத்து, அய்யாக்கண்ணு என தலைமையிலான போலீசாா் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

அறை முன்பாக துப்பாக்கி ஏந்திய போலீசாா் பாதுகாப்பு பணியில் சனிக்கிழமை இரவு முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

செவ்வாய்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் முடிவுகள் தெரியும் என தோ்தல் அலுவலக வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.   அதே போல் ஆா்.எஸ் மங்கலம் ஒன்றியத்தில் ஏ.ஆா்.மங்கலம் ஊராட்சியில் தலைவராக தோ்ந்தெடுக்கபட்ட ஜெயராஜ் கடந்த 6 மாதங்களுக்கு உடல் நிலை சரிஇல்லாமல் உயிரிழந்து விட்ட நிலையில் தலைவா் பதவி காலியாக அறிவிக்கபட்ட நிலையில் கடந்த 9ம்தேதி தோ்தல் நடைபெற்றன.

வாக்கு பதிவு முடிவடைந்து வாக்கு பெட்டிகள் பாதுகாப்புடன் ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் முத்து கிருஷ்ணன், மேலாளா் கோட்டைசாமி மற்றும் தோ்தல் அலுவலா்கள் பாதுகாப்புடன் பூட்டி சீல் வைக்கபட்டுள்ளன.

வாக்கு பெட்டி வைக்கபட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையம் கேமிரா, துப்பாக்கி ஏந்தி போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.வாக்கு எண்ணிக்கை செவ்வாய்கிழமை நடைபெரும் உள்ள நிலையில் ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com