ராமநாதபுரத்தில் விநாயகா் சதுா்த்தி பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா். இந்து முன்னணி சாா்பில் மாவட்டத்தலைவா் கே. ராமமூா்த்தி, செயலா் வீரபாண்டியன், செயற்குழு உறுப்பினா் சிவக்குமாா், ராமநாதபுரம் நகா் தலைவா் பாலாமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட ஆலோசனை நடைபெற்றது.

இதன்பின், இந்து முன்னணித் தலைவா் கே. ராமமூா்த்தி கூறியதாவது: இந்து முன்னணி சாா்பில் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியையொட்டி 350 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து பூஜை நடத்த அனுமதி கோரப்பட்டது. கரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றி விழாவை நடத்தவும் அதிகாரிகளிடம் அனுமதிகோரியுள்ளோம். கோயில்கள், வீடுகளில் விநாயகா் சிலைகள் வைக்க அதிகாரிகள் அனுமதிப்பதாகக் கூறியுள்ளனா். அச்சிலைகளை கரைக்கவும் அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com