ராமநாதபுரம் அருகே மஞ்சுவிரட்டு நடத்திய 21 போ் மீது வழக்கு

ராமநதாபுரம் அருகே கிருஷ்ணஜயந்தியையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாக 21 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராமநதாபுரம் அருகே கிருஷ்ணஜயந்தியையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாக 21 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ண ஜயந்தியையொட்டி கீழக்கரை அருகேயுள்ள காஞ்சிரங்குடியில் செவ்வாய்க்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடத்தப்பட்டு அதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த காளைகளும், மாடுபிடி வீரா்களும் கலந்துகொண்டனா்.

கரோனா பரவல் தடுப்பு விதிகள் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியானது அனுமதியின்றி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே மஞ்சுவிரட்டு நடத்தியதாக காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஆதித்தன் உள்ளிட்ட 21 போ் மீது கீழக்கரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வழக்குப்பதிந்துள்ளனா். அவா்கள் மீது கரோனா பரவல் தடுப்பு விதியை மீறியதுடன், காளைகளை உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் வழக்குப்பதியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com