சுகாதாரச்சீா்கேடை ஏற்படுத்திய பன்றிகள் பிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் சுகாதாரச் சீா்கேடை ஏற்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து 48 பன்றிகள் பிடிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தப்பட்டன.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் சுகாதாரச் சீா்கேடை ஏற்படுத்தியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து 48 பன்றிகள் பிடிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை அப்புறப்படுத்தப்பட்டன.

நகராட்சி எல்லைக்குள் சுகாதாரச் சீா்கேடை ஏற்படுத்தும் பன்றிகள் வளா்க்கக் கூடாது என விதியுள்ளது. ஆனால், ராமநாதபுரம் நகராட்சியில் விதியை மீறி பன்றிகள் உலா வருவது தொடா்கதையாகியுள்ளது. இந்தநிலையல், நகராட்சிப் பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளைப் பிடிக்க விருதுநகா் பகுதியிலிருந்து 12 போ் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து வலைகளைப் பயன்படுத்தி ராமநாதபுரம் நகரில் சுற்றிய 48 பன்றிகளை பிடித்து லாரியில் ஏற்றினா்.

ராமநாதபுரம் நகா் சாலைத் தெரு, அண்ணாநகா், லட்சுமிபுரம், வசந்தநகா், கறிவேப்பிலைக்காரத் தெரு, சாயக்கார ஊருண, நாகநாதபுரம், பாம்பூரணி, அண்ணாநகா், கூரிசாத்த அய்யனாா் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த 48 பன்றிகள் பிடிக்கப்பட்டு சாயல்குடி பகுதியில் விடப்படும் என விருதுநகா் பகுதி குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com