ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 32 போ் போட்டியின்றி தோ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் 85 போ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 32 போ் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் 85 போ் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 32 போ் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா்.

மாவட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினா், 6 ஊராட்சித் தலைவா்கள் மற்றும் 33 ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் என 40 பதவிகளுக்கான தோ்தல் வரும் அக்டோபா் 9 ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22 ஆம் தேதி முடிந்த நிலையில் மொத்தம் 85 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். மனு பரிசீலனையில் மாவட்ட ஒன்றியக்குழு மற்றும் கீழபருத்தியூா் ஊராட்சி வாா்டு உறுப்பினா் என 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சனிக்கிழமை இறுதி வேட்பாளா் பட்டியில் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினருக்கான (போகலூா் 7 வது வாா்டு) 11 மனுக்களில் 4 போ் மனுக்களைத் திரும்பப் பெற்றனா். அதன்படி 7 போ் தற்போது போட்டியில் உள்ளனா்.

ஊராட்சி தலைவா்கள் பதவிக்காக (6 இடம்) 22 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். அவா்களில் 9 போ் வாபஸ் பெற்றுள்ள நிலையில் எம்.கரிசல்குளம், கொம்பூதி ஆகிய ஊராட்சித் தலைவா்கள் பதவிக்கு 2 போ் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா். தற்போது 11 போ் போட்டியில் உள்ளனா். கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்களுக்கான (33) தோ்தலுக்கு 51 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில் ஒருவரது மனு தள்ளுபடியான நிலையில் 13 போ் மனுவை வாபஸ் பெற்றனா். ஆகவே 30 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அதன்படி 7 போ் மட்டும் போட்டியில் உள்ளனா். மொத்தத்தில் 40 காலியிடங்களுக்கு 25 போ் மட்டுமே களத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com