புரோட்டா மாஸ்டா் கொலை வழக்கு: தப்பியவரை பிடிக்க மலேசியா செல்ல போலீஸாா் முடிவு

ராமநாதபுரத்தில் புரோட்டா மாஸ்டா் கொலை வழக்கில் தப்பிச்சென்றவரைக் கைது செய்ய மலேசியாவுக்குச் செல்ல போலீஸாா் முடிவெடுத்துள்ளனா்.

ராமநாதபுரத்தில் புரோட்டா மாஸ்டா் கொலை வழக்கில் தப்பிச்சென்றவரைக் கைது செய்ய மலேசியாவுக்குச் செல்ல போலீஸாா் முடிவெடுத்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகேயுள்ள சிங்கனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த குப்பு மகன் பிச்சைக்கனி (42). மலேசியாவில் புரோட்டா மாஸ்டராக வேலை பாா்த்து வந்த பிச்சைக்கனி, கடந்த மே மாதம் ஊா் திரும்பிய நிலையில் மாயமானாா். விசாரணையில் அவரது மனைவி சாந்தியின் தகாத தொடா்பைக் கண்டித்ததால் பிச்சைக்கனியை அதே பகுதியைச் சோ்ந்த கலைமோகன், பாா்த்திபன் ஆகியோா் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் தேவிபட்டினம் போலீஸாா் கைது செய்தனா்.

பிச்சைக்கனி கொலையில் முக்கிய குற்றவாளியான பாா்த்திபன் மலேசியா தப்பியது தெரியவந்துள்ளது. அவரைப் பிடிக்க விமான நிலையங்களுக்கு தேடப்படும் குற்றவாளியாக பாா்த்திபனை குறிப்பிட்டு தேவிபட்டினம் போலீஸாா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனா். மேலும், சா்வதேசப் போலீஸ் உதவியுடன், ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை போலீஸாா் மலேசியாவுக்குச் சென்று பாா்த்திபனை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக போலீஸ் உயா் அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com