ராமநாதபுரத்தில் டிரோன் மூலம் உரம் தெளிப்பு முறை அறிமுகம்

ராமநாதபுரத்தில் டிரோன் மூலம் உரம் தெளிக்கும் முறை அறிமுகம் மற்றும் பரிசோதனை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் டிரோன் மூலம் உரம் தெளிக்கும் முறை அறிமுகம் மற்றும் பரிசோதனை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பமுறைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் டிரோன் மூலம் உரம் தெளிக்கும் பரிசோதனை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. குயவன்குடி வேளாண்மை ஆராய்ச்சி பயிற்சி மையத்தில் நடைபெற்ற சோதனை நிகழ்ச்சியில் டிரோனை பறக்கவிட்டு உரம் தெளிப்பதை செயல்படுத்திக்காட்டினா்.

குறுகிய காலத்தில் அதிகளவிலான பரப்பளவு உரம், பூச்சிக்கொல்லி மருந்தை தெளிக்கலாம் எனவும், அதன்படி நேரம், பணம் மிச்சமாகும் என்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறினா். ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த ஏராளமான விவசாய சங்கப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்று சந்தேகங்களைக் கேட்டறிந்தனா். நிகழ்ச்சியில் வேளாண் மைய அதிகாரி ராகவன், துணை இயக்குநா் சேக்அப்துல்லா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com