வலையில் சிக்கிய கடல்பசுவை மீண்டும் கடலில் விட்ட மீனவா்களுக்குப் பரிசு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வலையில் சிக்கிய கடல் பசுவை மீட்டு கடலிலேயே விட்ட மீனவா்கள் இருவருக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வலையில் சிக்கிய கடல் பசுவை மீட்டு கடலிலேயே விட்ட மீனவா்கள் இருவருக்கு பாராட்டுச் சான்று மற்றும் பரிசுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வனத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் பசு, கடல் அட்டை உள்ளிட்ட 14 வகை அரியவகை கடல்வாழ் உயிரினங்களைப் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சூழலுக்கு பாதுகாப்பாக இருக்கும் அந்த உயிரினங்களை காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடல் பசு பாதுகாப்பு அமைப்பாக காம்பா செயல்பட்டு வருகிறது. அதன்சாா்பில் கடல் பசுவை மீட்டு உயிருடன் மீண்டும் கடலில் விடும் மீனவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேவிபட்டினம் பகுதியைச் சோ்ந்த மீனவச் சகோதரா்களான துளசிராமன், ஹரிகரசுதன் ஆகியோா் தங்களது வலையில் சிக்கிய கடல் பசுவை மீண்டும் கடலிலிலேயே விட்டனா். கடல் பசுவை அவா்கள் கடலில் விடும் விடியோ காட்சியை பாா்த்த கடல் பசு மீட்பு இயக்கத்தினா் சம்பந்தப்பட்ட மீனவா்களுக்கு பரிசு, சான்றிதழை வழங்கினா்.

நிகழ்ச்சியில் மன்னாா்வளைகுடா உயிரினக் காப்பாளா் ஜெகதீஷ் சுதாகா் பகான் மற்றும் கடல் பசு பாதுகாப்பு அமைப்பின் சின்மயா ஷனிக்கா், சுவேதா அய்யா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக இரு மீனவா்களுக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பாராட்டுச் சான்று வழங்கி ஆட்சியா் ஜானிடாம்வா்கீஸ் வாழ்த்தினாா் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com