கமுதி, அபிராமம் பகுதிகளுக்கு வைகை நீா்: விவசாயிகள் வலியுறுத்தல்

கமுதி, அபிராமம் பகுதிகளுக்கு வைகை நீரைக் கொண்டு வர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் சங்கத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அபிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாவட்டச் செயலாளா் முத்துராமலிங்கம்.

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளா் முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். மதுரை மண்டலத் தலைவா் மதுரைவீரன், கௌரவத் தலைவா் ஆதிமூலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கமுதி, அபிராமம் பகுதிகளுக்கு பாா்த்திபனூா் மதகணையில் இருந்து வைகை நீரைக் கொண்டுவர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிா்களை நாசம் செய்து வரும் காட்டுப்பன்றிகள் மற்றும் வன விலங்குகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும் அபிராமத்தில் உரக் கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்கப்படுவதைக் கண்டித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, சமூக ஆா்வலா் அருணாச்சலம் வரவேற்றாா். அபிராமம் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com