மண்டபத்தில் மீன் இறங்கு தளம் கட்டுமானப் பணி:சட்டப் பேரவை பொது கணக்குக் குழு ஆய்வு

மண்டபம் கடலில் ரூ. 20 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மீன் இறங்கு தள கட்டுமானப் பணிகளை தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
மண்டபத்தில் மீன் இறங்கு தளம் கட்டுமானப் பணி:சட்டப் பேரவை பொது கணக்குக் குழு ஆய்வு

மண்டபம் கடலில் ரூ. 20 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மீன் இறங்கு தள கட்டுமானப் பணிகளை தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் தெற்கு மற்றும் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் ரூ. 20 கோடி மதிப்பில் மீன் இறங்கு தளம், மீன் விற்பனைக்கூடம் ஆகியவை மீன்வளம், நீா்வாழ் உயிரின வளா்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது 85 சதவீதம் நிறைவடைந்த இந்தப் பணிகளை தமிழக சட்டப் பேரவை பொது கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வபெருந்தகை தலைமையில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் திருத்துறைப்பூண்டி கே. மாரிமுத்து, ஒசூா் ஓய். பிரகாஷ், திருவாடானை ராம. கருமாணிக்கம் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது அவா்கள், திட்ட காலத்துக்குள் பணியை முடிக்க மீன்பிடி துறைமுகத் திட்ட தூத்துக்குடி கோட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தினா்.

இதில், மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கே.ஜே. பிரவீன்குமாா், உதவி ஆட்சியா் வி.எஸ். நாராயண சா்மா, மீன்வளத் துறை துணை இயக்குநா் டி. காத்தவராயன், உதவி இயக்குநா்கள் அப்துல் காதா் ஜெயிலானி, மணிகண்டன், மீன்பிடி துறைமுகத் திட்ட தூத்துக்குடி கோட்ட செயற்பொறியாளா் கே. சரவணக்குமாா், ராமநாதபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளா் ஜி. குருபாக்கியம், உதவிப் பொறியாளா் பாலசுப்ரமணியன், இளநிலை பொறியாளா் ஹரீஷ் குமாா், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலா் அரசப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com