ராமநாதபுரம் நகராட்சியில் சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு: தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

ராமநாதபுரம் நகராட்சியில் சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்ததை மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் அஜய்யாதவ் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

ராமநாதபுரம் நகராட்சியில் சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்ததை மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் அஜய்யாதவ் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

ராமநாதபுரம் நகராட்சியில் 33 வாா்டுகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் மனு திரும்பப் பெறுதல் மற்றும் சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு திங்கள்கிழமை நடைபெற்றன. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவோா், வேட்பு மனுத்தாக்கல் செய்தவா்கள் மட்டுமே நகராட்சி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். மனுக்களை திரும்பப் பெறுதல் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு முடிந்தது.

பின்னா் நகராட்சியின் 33 வாா்டுகளில் மனு தாக்கல் செய்து திரும்பப் பெறாத சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அப்போது நகராட்சி அலுவலகத்துக்கு மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் அஜய்யாதவ் வந்தாா். அவரை ஆணையரும், நகராட்சி தோ்தல் அலுவலருமான சந்திரா வரவேற்றாா். கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்ட இடங்கள், காவல்துறை பாதுகாப்பு ஆகியவற்றை தோ்தல் பாா்வையாளா் ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com