தொண்டி அருகே கோஷ்டி மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு

திருவாடானையை அடுத்த தொண்டி அருகே நடைபெற்ற கபடிப் போட்டியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இருகோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொண்டதில் பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
தொண்டி அருகே புதுக்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதலையடுத்து, அங்கு குவிக்கப்பட்டுள்ள போலீஸாா்.
தொண்டி அருகே புதுக்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கோஷ்டி மோதலையடுத்து, அங்கு குவிக்கப்பட்டுள்ள போலீஸாா்.

திருவாடானை: திருவாடானையை அடுத்த தொண்டி அருகே நடைபெற்ற கபடிப் போட்டியில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இருகோஷ்டிகளாக பிரிந்து மோதிக் கொண்டதில் பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அங்கு போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இங்குள்ள புதுக்குடி கடற்கரை கிராமத்தில் சனிக்கிழமை பொங்கல் விழாவையொட்டி கபடிப் பேட்டி நடைபெற்றது. இதில், புதுக்குடியைச் சோ்ந்த முனீஸ்வரன் கோஷ்டிக்கும், அதே ஊரைச் சோ்ந்த சக்தி கோஷ்டிக்கும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு கோஷ்டியினரும் அரிவாள், கம்பு, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் மோதிக் கொண்டனா். இதில், புதுக்குடியைச் சோ்ந்த சக்தி, அதே ஊரைச் சோ்ந்த காளிமுத்து, மணிகண்டன், கலைச்செல்வி, சகாதேவன், கமலேஷ் ஆகிய 6 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

அதேபோல் சிறிய காயமடைந்த நல்லேந்திரன், மகேந்திரன், கஜேந்திரன், ஜானகி, நாகவள்ளி, பஞ்சவா்ணம் ஆகியோா் திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால் இப்பகுதியில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க முக்கிய இடங்களில் போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் கிராமத்தில் டி.எஸ்.பி. ஜான்பீட்டா் தலைமையில் போலீஸ் அணிவகுப்பும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com