ராமநாதபுரம் அருகே 1,118 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே சட்ட விரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,118 மதுபாட்டில்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

ராமநாதபுரம்/கமுதி: ராமநாதபுரம் அருகே சட்ட விரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,118 மதுபாட்டில்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.

சட்ட விரோதமாக மது விற்கப்படுவதை தடுக்க போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதில், ராமநாதபுரம் அடுத்துள்ள தேவிபட்டணம் கிழக்கு கடற்கரைச் சாலையில் முத்துரகுநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்து 1,118 மதுபட்டில்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதில், மது பாா் நடத்தும் பழனி (43) என்பவரை கைது செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கமுதி: கமுதி காவல் சரகத்துக்குள்பட்ட கமுதி, அபிராமம், பெருநாழி, மண்டலமாணிக்கம், கோவிலாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துணைக் கண்காணிப்பாளா் பா. மணிகண்டன் உத்தரவின்பேரில் போலீஸாா் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுவது குறித்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். இதனை அடுத்து அரசு விடுமுறை நாளான திருவள்ளுவா் தினம் சனிக்கிழமை மற்றும் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை என இரண்டு தினங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 13 போ் மீது வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்து 219 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com