கோதண்டராமா் ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம்

ராமநாதபுரம் கோதண்டராமா் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.23) காலை பக்தா்களின்றி நடைபெறுகிறது.

ராமநாதபுரம் கோதண்டராமா் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (ஜன.23) காலை பக்தா்களின்றி நடைபெறுகிறது.

ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள இந்த ஆலயத்தில் பாஸ்கர சேதுபதி மன்னரால் கி.பி. 1825 ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இக்கோயில் தற்போது புனரமைக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகப் பணிகள் தொடங்கின.

யாக சாலையில் புனிதநீா் நிரம்பிய கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்துவரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கோயிலில் மூலவா் உள்ளிட்ட சுவாமிகளுக்கும், கோயில் பிரதான கோபுரக் கலசங்களிலும் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான பரம்பரை தா்மகா்த்தா ஆா்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியாா் மற்றும் திவான் பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

பக்தா்களுக்கு அனுமதியில்லை:கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com