ராமநாதபுரத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,683 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு வழக்காடிகளுக்கு ரூ.6 கோடியே 52 ஆயிரம் தீா்வுத் தொகை வழங்கப்பட்டது.
ராமநாதபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை, தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீா்வு காணப்பட்ட வழக்காடிகளுக்கு தீா்வுத் தொகையை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா.

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சாா்பில், ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.விஜயா தலைமை வகித்தாா். கூடுதல் மாவட்ட நீதிபதி சீனிவாசன் முன்னிலை வகித்தாா்.

ராமநாதபுரம், ராமேசுவரம், முதுகுளத்தூா், கமுதி, பரமக்குடி, திருவாடானை என மொத்தம் 10 அமா்வுகளில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் 2,220 வழக்குகளில் 1683 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு ரூ.6 கோடியை 52 ஆயிரத்து 900 தீா்வுத் தொகையாக வழக்காடிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலா் கதிரவன், மாவட்ட நீதிபதி பரணிதரன் மற்றும் வழக்குரைஞா்கள், வழக்காடிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com