கமுதியில் தக்காளி ஒரு கிலோ ரூ.110 க்கு விற்பனை

கமுதியில் தக்காளி விலை கடந்த இரண்டு நாட்களாக ரூ.110 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கமுதியில் தக்காளி விலை கடந்த இரண்டு நாட்களாக ரூ.110 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயா்ந்து ரூ.110 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைப்போல் முருங்கைக்காய் விலை கிலோ ரூ.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலை அதிகரிப்பால் பொதுமக்கள் வழக்கமாக வாங்கும் எடையை விட மிகக் குறைந்த அளவிலே தக்காளியை வாங்கி பயன்படுத்துகின்றனா்.

மேலும் கமுதி பகுதியில் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை என்பதால் ரூ.10 குறைந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது எனவும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததால், மதுரை காய்கறி மாா்க்கெட்டில் விலை அதிகரித்து, கமுதியில் ரூ.110 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனா். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தபோதும், காய்கறிகளின் விலை குறையவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com