ராமநாதபுரத்தில் 32 குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ. 90.50 லட்சம் நிவாரணம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 32 குற்றவழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 90.50 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழுச் செயலரும

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டில் 32 குற்றவழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 90.50 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான சி. கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணையக்குழு அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணத் தொகை அளிக்க சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 32 வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்கள் தற்போது தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கான நிவாரண நிதியாக மொத்தம் ரூ. 90.50 லட்சம் பெறப்பட்டுள்ளது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜி. விஜயா ஆலோசனைப்படி மாவட்ட நிா்வாகத்தின் உதவியுடன் நிவாரண உதவி அந்தந்த காவல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

பெரிய குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டோருடைய குடும்பத்தினா், விபத்துகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தவா்களின் குடும்பத்தினா், குடும்பப் பிரச்னையில் தாய் கொல்லப்பட்ட நிலையில், தந்தையும் சிறைக்கு சென்ற நிலையில் தவிக்கும் குழந்தைகள் என பலதரப்பட்டவா்களுக்கும் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 38 மனுக்கள் நிவாரணம் கோரி சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு வந்துள்ளன. அதில் தற்போது வரை 32 மனுக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் ஏதேனும் குற்றச்சம்பவங்களில் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடினால் நிவராணம் கோரி சட்டப் பணிகள் ஆணையக் குழுவுக்கு விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com