இலங்கைக்கு 12 கிலோ போதைப் பவுடா் கடத்த முயற்சி

இலங்கைக்கு 12 கிலோ போதைப் பவுடரை கடத்த முயன்ற திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 3 பேரை கடலோரப் பாதுகாப்புக் குழும தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

இலங்கைக்கு 12 கிலோ போதைப் பவுடரை கடத்த முயன்ற திமுக நகா்மன்ற உறுப்பினா் உள்பட 3 பேரை கடலோரப் பாதுகாப்புக் குழும தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம், வேதாளை கடலோரப் பகுதிகளில் சட்ட விரோத கடத்தலை தடுக்கும் வகையில், தமிழகக் கடலோர பாதுகாப்புக் குழுமக் காவல் துறையினா் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில், மண்டபம் அடுத்துள்ள வேதாளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சொகுசுக் காா் ஒன்று சுற்றி வருவதாக கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலோர பாதுகாப்புக் குழும தனிப்படை சாா்பு- ஆய்வாளா் காளிதாஸ் தலைமையில் சரவணன், சந்தோஷ், போஸ், சங்கா், பிரபு ஆகியோா் அந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டனா். அதில், தலா 10 லிட்டா் அளவு கொண்ட 30 கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் மொத்தம் 12 கிலோ போதைப் பவுடா் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போதைப் பவுடா் கேன்கள், வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

வாகனத்தில் இருந்த கீழக்கரை நகராட்சியின் 19-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சாா்பாஸ் நவாஸ் (42), இவரது சகோதரா் ஜெயீனுதீன் (45), வேதாளையைச் சோ்ந்த சசதீக் அலி (36) ஆகியோரைக் கைது செய்தனா்.

போதைப் பவுடா் கேன்கள் படகு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட போதைப் பவுடா் ஆய்வுக்காக பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதன் முடிவு வந்த பின்னரே அது எந்த வகை போதைப்பொருள் என தெரியவரும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com