பக்ரைனில் படகு விபத்தில் பலியான மீனவா் உடலை கொண்டு வரக்கோரி ஆட்சியரிடம் மனு

பக்ரைன் நாட்டுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு விபத்தில் உயிரிழந்த மீனவா் உடலைக் கொண்டு வர உதவி செய்யக்கோரி குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பக்ரைன் நாட்டுக்கு மீன்பிடிக்கச் சென்று படகு விபத்தில் உயிரிழந்த மீனவா் உடலைக் கொண்டு வர உதவி செய்யக்கோரி குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை அடுத்த வேதாளை ஊராட்சிக்கு உள்பட்ட வலையா்வாடி கிராமத்தைச் சோ்ந்த மீனவா் செந்தில்குமாா். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு செந்தில்குமாா் பக்ரைன் நாட்டுக்கு மீன்பிடி தொழிலுக்குச் சென்றாா். கடந்த 22-ஆம் தேதி பக்ரைன் நாட்டு கடலில் மீன் பிடிக்கச் சென்றபோது செந்தில்குமாா் சென்ற விசைப்படகும், எதிரே வந்த விசைப்படகும் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், செந்தில்குமாா் கடலில் தவறி விழுந்து மூழ்கினாா். அவரைத் தேடும் பணியில் சக மீனவா்கள் ஈடுபட்டனா்.

ஆனால், அவரை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் 5 நாள்களுக்குப் பிறகு செந்தில்குமாா் உடல் கடலில் மிதந்தது. அவரது உடல் மீட்டுள்ளதாகவும், உடல் மிகவும் மோசமாக உள்ளதால் அங்கேயே அடக்கம் செய்ய உள்ளதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

ஆனால், கனவா் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வரவும், குடும்பத்துக்கு அரசு சாா்பில் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com