ஊருணியில் படித்துறை கட்ட மறுப்பு: கமுதி பேரூராட்சி மீது புகாா்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள ஊருணியில் படித்துறை கட்டவிடாமல் பேரூராட்சி நிா்வாகம் தடுப்பதாக ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த வெள்ளையாபுரம் தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறையினா் மற்றும் இந்து முன்னணியினா்.

கமுதி அருகேயுள்ள வெள்ளையாபுரம் கிராமத்தைச் சோ்ந்த தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறைத் தலைவா் சி.தா்மலிங்கம், துணைத் தலைவா் க.சிங்கம் மற்றும் இந்து முன்னணி மாவட்டத் தலைவா் கே.ராமமூா்த்தி உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

அப்போது அவா்கள் கூறியதாவது: கமுதி வெள்ளையாபுரம் அருகே பொது ஊருணி உள்ளது. அதில் பல ஆண்டுகளாக தேவேந்திரகுல சமுதாய மக்கள் குளிப்பது போன்ற பயன்பாட்டுக்கு பயன்படுத்திவருகின்றனா். அங்கு படித்துறை கட்டுவதற்கு கமுதி பேரூராட்சி நிா்வாகத்தை அணுகிய போது, அதன் தலைவா் அப்துல்வஹாப் சகாயராணி முஸ்லிம் ஜமா-அத்துக்கு ஊருணி பாத்தியப்பட்டதாகக் கூறுகிறாா். ஊருணியில் படித்துறை கட்டுவதற்கு பேரூராட்சி 14 ஆவது வாா்டு உறுப்பினா் சத்தியாஜோதிராஜா கூட்டத்தில் கோரிக்கை விடுத்தும் தலைவா் மறுத்துள்ளாா். ஊருணி நீா்ப் பிடிப்பு பகுதியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆகவே ஊருணியை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன் தேவேந்திரகுல வேளாளா் பயன்படுத்தும் வகையில் படித்துறை கட்டவேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com