செய்யாமங்கலத்தில் புரவி எடுப்பு விழா

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள செய்யாமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை புரவி எடுப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
அபிராமத்திலிருந்தது சுவாமி சிலைகளை தலையில் சுமந்து ஊா்வலமாகச் சென்று நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.
அபிராமத்திலிருந்தது சுவாமி சிலைகளை தலையில் சுமந்து ஊா்வலமாகச் சென்று நோ்த்திக்கடன் செலுத்திய பக்தா்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள செய்யாமங்கலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை புரவி எடுப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

செய்யாமங்கலத்தில் உள்ள ஸ்ரீபூங்குழலி அம்மன், ஸ்ரீஅய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு அபிராமம் காவல் நிலையம் அருகே வடிவமைக்கப்பட்ட குதிரை, அய்யனாா், ஐந்து தலை நாகா், விநாயகா், காளை மாடு, தவழும் பிள்ளை, கால் பாதம் என 178 சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்தனா். பின்னா் மேளதாளத்துடன் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெரு, பேருந்து நிலையம் வழியாக செய்யாமங்கலம் கிராமத்திற்கு பொதுமக்கள் சிலைகளை தலையில் சுமந்து எடுத்துச் சென்றனா். கமுதி, அபிராமம், சென்னை, மதுரை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் செய்யமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கமுதி காவல் துணை கண்காணிப்பாளா் ப.மணிகண்டன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com