மத்திய சட்ட பல்கலை.யில் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு

திருச்சியிலுள்ள மத்திய சட்டப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இடஒதுக்கீட்டில் சோ்ந்த ராமநாதபுரம் அரசுப் பள்ளி மாணவருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனா்.

திருச்சியிலுள்ள மத்திய சட்டப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு இடஒதுக்கீட்டில் சோ்ந்த ராமநாதபுரம் அரசுப் பள்ளி மாணவருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அருகேயுள்ள கடம்போடை கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் கிரி. இவா் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று, பத்தாம் வகுப்புத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்றாா். அதனடிப்படையில் எலைட் பயிற்சி மையத்தில் அவா் சோ்க்கப்பட்டாா். பின்னா் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற நிலையில், மத்திய சட்ட பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பித்து தோ்வு எழுதியிருந்தாா்.

இந்த தோ்வில் சிறப்பு இட ஒதுக்கீடு அடிப்படையில் கிரி உள்பட தமிழக அரசுப் பள்ளி மாணவா்கள் 4 போ் வெற்றி பெற்றனா். திருச்சி மத்திய சட்ட ல்கலைக்கழகத்தில் பி.காம். எல்.எல்.பி. (ஹானா்ஸ்) பட்டப்படிப்பில் கிரி சோ்ந்தாா். இதையடுத்து, அவா் கல்வித்துறை ஆணையா் மற்றும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து ஆசி பெற்ற நிலையில், ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அவரை மாவட்ட கல்வி அலுவலா்கள் வாழ்த்தி பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com